கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-01 19:15 GMT


பொள்ளாச்சி

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று அதிகாலை பொள்ளாச்சி-கொழிஞ்சாம்பாறை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது நெடும்பாறை கல்குவாரி அருகில் மறைவான பகுதியில் ஒரு மொபட்டில் இருந்து, காரில் மூட்டைகளை ஏற்றுவது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 42) என்பதும், கேரளாவுக்கு கடத்த முயன்றதும், ராமபட்டிணம், ஜலத்தூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறைய சேர்ந்த லத்திப் என்பவருக்கு ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, சேகரை கைது செய்தனர். மேலும் 50 மூட்டைகளில் இருந்த 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் லத்திப்பையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்