மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

புளியரை சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-21 21:21 GMT

குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நேற்று புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புளியரை அருகே உள்ள தெற்குமேடு பகுதியை சேர்ந்த குருசாமி என்ற குட்டியப்பன் (வயது 53) தனது மோட்டார் சைக்கிளில் 100 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குருசாமியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்