மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
நாகா்கோவில்,
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 2 மூடைகளில் மொத்தம் 130 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டாா் சைக்கிளுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த களியக்காவிளை சானல்கரையை சேர்ந்த மேரி மேகதூம் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.