ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சங்கரன்கோவில் அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-05-15 20:15 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கரன்கோவில் அருகே இந்திரா காலனி பஸ்நிறுத்தத்தில் மொபட்டில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மொபட்டில் சுமார் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மொபட்டில் வந்த களப்பக்குளம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜ் (வயது 44) என்பவரை கைது செய்து, அரிசி மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்