ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-16 20:04 GMT

நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் நெல்லை -தென்காசி மெயின் ரோட்டில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பாலிடெக்னிக் அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை ெசய்த போது, அதில் 40 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை செயின்ட் பால்ஸ் ரோட்டை சேர்ந்த முத்துகுமரன் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் காருடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்