ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-23 06:45 GMT

திருப்பத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சப்- இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் தலைமையில் நேற்று இரவு ஆந்திர மாநில எல்லையான வெலதிகாமணி பெண்டா பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது இரண்டு ஆட்டோக்களில் தலா 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்ளை துரத்தி பிடித்தபோது ராமகுப்பத்தை சேர்ந்த வாசு (47) என்பவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து ஒரு டன் ரேஷன் அரிசியுடன் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்