ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-10 18:48 GMT

நெல்லை உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று ஆலங்குளத்தில் இருந்து நெட்டூர் செல்லும் சாலையில் நல்லூர் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மினி லாரியில் 1,840 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த ஆலங்குளம் தாலுகா குறிப்பன்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிசி, மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய பழனிவேல்குமார் என்பவரை தேடி வருகின்றனர். அதே போல் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் அத்தியூத்து விலக்கு பகுதியில் நடந்த சோதனையில் 735 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்தி வந்த ஆலங்குளம் ஆலடிபட்டியை சேர்ந்த சுதாகர் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்