ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-14 18:53 GMT

தஞ்சாவூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில், புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கே.புதுபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனில் தஞ்சாவூர் மாவட்டம் பழமனேரியை சேர்ந்த சூரியராஜ் என்பவர், 1,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரும், தலைமறைவான சரக்கு வேன் உரிமையாளருமான கே.புதுபட்டியை சேர்ந்த செல்வராஜ் (வயது 43) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்