ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-21 21:23 GMT

கடையநல்லூர் அருகே இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலா, சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் 1,160 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கியதாக கடையாலுருட்டியை சேர்ந்த சந்திரனை (வயது 43) கைது செய்தனர். தப்பி ஓடிய சிவகுமார், வேலப்பநாடானூரை வேல்முருகன், சாந்தி என்ற உலகம்மாள் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

இவர்கள் கடையநல்லூர் பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவிற்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்