600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையில் குமாரசாமி, தேவேந்திரன், முத்து கிருஷ்ணன் ஆகிய போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். உப்பூர் அருகே கருவேலமர காட்டுப்பகுதியில் 15 சாக்குமூடைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கும்மங்குடி பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.