ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது
காவேரிப்பட்டணம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
காவேரிப்பட்டணம் அருகே உள்ள தொட்டிப்பள்ளம் கிராமத்தில் தவுடு அரைக்கும் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. அந்த அரிசியை அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது39) என்பவர் குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.