கிருஷ்ணகிரியில் 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-12-08 18:45 GMT

கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி

கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி கடத்தப்பட்டு நேரடியாக குடோன்களில் பதுக்கி வைத்து அங்கிருந்து கர்நாடக மாநிலம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கடத்துவதாக கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மேற்பார்வையில் பறக்கும் படை தாசில்தார் இளங்கோ, வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ் மற்றும் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள வீரப்பன் நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

பறிமுதல்

அப்போது அந்த பகுதியில் உள்ள பாழடைந்த குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 3 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்