ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தேவகோட்டை,
ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரிலிருந்து ரேஷன் அரிசி மூடைகள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேவகோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் ஆற்று பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் மினிவேனை ஓட்டி வந்தது டிரைவர் தமிழ்மணி (வயது 32) என்பதும், அட்டை பெட்டிகளில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் சிவகங்கையில் உள்ள குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.