லாரியில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை தர்மபுரி அருகே அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-12 16:01 GMT

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவுபடி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குண்டலப்பட்டி பகுதியில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தினார்கள். அலுவலர்களை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து அவர்கள் அந்த லாரியை சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பதும், அந்த அரிசியை கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் லாரியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் குறித்தும், ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்