தர்மபுரி அருகேகாரில் 540 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

தர்மபுரி அருகே காரில் 540 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-15 19:00 GMT

தர்மபுரி அருகே காரில் 540 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தர்மபுரி - அரூர் மெயின் ரோடு, செம்மனஅள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 18 மூட்டைகளில் 540 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

கார் பறிமுதல்

அவர் செம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த கதிரவன் (வயது 42) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்