போச்சம்பள்ளியில் இருந்து கர்நாடகாவுக்குகாரில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் உள்பட 2 பேர் கைது

Update: 2023-08-11 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிவர்மன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ அளவிலான 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கிருஷ்ணகிரி அடுத்த துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 30), பெத்ததாளப்பள்ளி ஹரிஷ் (19) என்பதும், போச்சம்பள்ளி, சந்தூர் பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்