திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரேஷன்கார்டு

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரேஷன்கார்டு வழங்கப்படும் என மாநில உணவு ஆணைய தலைவர் கூறினார்.;

Update:2022-07-06 01:48 IST
திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரேஷன்கார்டு

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரேஷன்கார்டு வழங்கப்படும் என மாநில உணவு ஆணைய தலைவர் கூறினார்.

ரேஷன் கார்டுகள்

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள, திருநங்கைகள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கி அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

ரேஷன்கார்டு

கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரேஷன்கார்டு வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். மேலும், நியாய விலைக்கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகாரப் படிவங்கள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவுத் துணைப் பதிவாளர்கள், சத்துணவுத் திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்