ரேஷன் கடையில் 110 அரிசி மூடை கொள்ளை
ரேஷன் கடையில் 110 அரிசி மூடை கொள்ளையடிக்கப்பட்டது.;

இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள மேலத்துறையூர் கிராமத்தில் அமைந்துள்ள ரேஷன் கடையில் 110 அரிசி மூடை மற்றும் து.பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். வழக்கம்போல கடையை திறக்க வந்த ரேஷன் கடை விற்பனையாளர் முருகேசன் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.