அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில் ரத்ததான முகாம்

அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-09 19:01 GMT

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் மருத்துவக் கல்லூரி இணைந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரத்ததான முகாமை நடத்தியது. முகாமை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா தொடக்கி வைத்தார். ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு மணவாளன் முன்னிலை வகித்தார். முகாமில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 75-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். மருத்துவக்கல்லூரி அவசரகால மருத்துவ நிபுணர் அருண் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தத்தை சேகரித்து பாதுகாப்பான முறையில் ரத்த வங்கிக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்