ராசா சாமி நல்லமங்கையம்மன் கோவிலில்இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்க எதிர்ப்புகலெக்டர் அலுவலகத்துக்கு பக்தர்கள் திரண்டு வந்து மனு

ராசா சாமி நல்லமங்கையம்மன் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்க எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்துக்கு பக்தர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனா்.

Update: 2023-10-16 20:59 GMT

ராசா சாமி நல்லமங்கையம்மன் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்துக்கு பக்தர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

குலதெய்வ கோவில்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்ற தலைவர் சி.முத்துசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 10 பேர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்க போலீசார் அனுமதித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

பெருந்துறை தாலுகா தென்முகம் வெள்ளோடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராசா சாமி நல்லமங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த சாமியை குலதெய்வமாக கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர். அங்கு புதிய கோவில் கட்டுவதற்கு குலதெய்வமாக கொண்ட பக்தர்களிடம் நன்கொடை பெறப்பட்டது. புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய ராசா சாமி கோவில், புதிதாக கட்டிய கோவிலுக்கு அருகில் உள்ளது. எனவே நாங்கள் புதிதாக கட்டிய கோவிலுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

உண்டியல் வைக்க முயற்சி

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதிதாக கட்டிய கோவிலில் உண்டியல் வைக்க முயற்சி செய்தனர். உண்டியல் வைப்பது தொடர்பாக இதுவரை எந்தஒரு அறிவிப்பும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. எனவே புதிய கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கோவிலுக்கும், நிர்வாகிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

மனு கொடுக்கும்போது, மன்றத்தின் செயலாளர் என்.டி.கண்ணுசாமி, பொருளாளா் கே.டி.பொன்னுசாமி, கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை தலைவர் மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.பழனிசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்