பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் சிக்கினார்
பத்தமடையில் பெண் பாலியல் பலாத்காரம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சேரன்மாதேவி:
பத்தமடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் அஜித்குமார் (வயது 27). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.