ராணி ரமாதேவி தொண்டைமான் பட திறப்பு விழா
ராணி ரமாதேவி தொண்டைமான் பட திறப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தபோது கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி தொண்டைமான் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி உடல்நலகுறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவரது படத்திறப்பு விழா நேற்று புதுக்கோட்டை பல்லவன் குளம் அருகில் உள்ள மன்னர் மாளிகையில் நடைபெற்றது. விழாவில் ராணி ரமாதேவியின் உருவப்படத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தஞ்சை மன்னர் பாபாஜி போன்ஸ்லே, சமத்தூர் ஜமீன் சங்கர் வானவராயர், ராமநாதபுரம் அரச குடும்பத்தை சேர்ந்த தினகர் ராஜா சேதுபதி, சாந்தூர் அரச குடும்பத்தை சேர்ந்த ரிஷீ மற்றும் சஞ்ஜீவினி, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, டாக்டர்.முத்துராஜா, ராணி ரமாதேவியின் மகன் ராஜகோபால தொண்டைமான், அவரது மனைவியும், திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான், ராணி ரமாதேவியின் மகள் ராஜ்குமாரி ஜானகி மனோஹரி, பேரன்கள் யுவராஜா பிருத்விராஜ் தொண்டைமான், சாஸ்வத் சிக்கிவாகனன், பேத்தி ராஜ்குமாரி ராதா நிரஞ்சனி, முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, ராஜசேகர், ரங்கசாமி, தொழிலதிபர் ராமசந்திரன், கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜமாதா படத்திறப்பு விழா குழுவினர் செய்திருந்தனர்.