கோவில்பட்டியில் சாலைவரி செலுத்தாமல் ஓடிய 3 வாகனங்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் சாலைவரி செலுத்தாமல் ஓடிய 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-10-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சாலை வரி செலுத்தாமல் ஓட்டப்பட்ட ஒரு பள்ளிக்கூட பஸ், சுற்றுலா கார் மற்றும் லோடு வேன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். லோடு வேனுக்கு ரூ.12,900, சுற்றுலா காருக்கு ரூ.16 ஆயிரம், பள்ளிக்கூட பஸ்சுக்கு ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாகன உரிமையாளர்கள் வாகனங்களுக்கு முறையாக சாலை வரியை செலுத்தி இயக்க வேண்டும். இல்லையேல் சாலைவரி செலுத்தப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்