மழை மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

மழை மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-15 18:59 GMT

ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் மணிவர்ண மழைமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. குளமங்கலம் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாஞ்சாலி செல்வகுமார் தலைமையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்