ராமேசுவரம் கோவிலில் தங்கத்தேர் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
12 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தங்கத்தேர் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு புதிதாக தங்கத்தேர் ஒன்று செய்யப்பட்டது. இந்த தங்கத்தேரை 3-வது பிரகாரத்தில் இழுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்க தேர் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ராமேசுவரம் கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு தங்கத்தேரை உடனடியாக பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து தங்கத்தேர் புதுப்பொலிவு பெற்றது. இந்த தேரை அமைச்சர் சேகர்பாபு, ஆணையாளர் குமரகுருபரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் ஓடியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.