ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தோடு திடீரென நிறுத்தம்பயணிகள் கடும் அவதி

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தோடு திடீரென நிறுத்தம் செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

Update: 2023-02-14 18:45 GMT


மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை ரெயில் பாதையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாராந்திர ரெயில்கள், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என்று தென்னக ரெயில்வே துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பனாரசில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 1 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது விழுப்புரத்தோடு இந்த ரெயில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால் ராமேஸ்வரம் வரை செல்ல வந்த பயணிகள், பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் ரெயில் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் தொடர்ந்து அடுத்த 3 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. இதன் காரணமாக மதுரை மார்க்கமாக செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில்களான ராமேஸ்வரம், நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போன்றவை இன்று (அதாவது நேற்று) முதல் விழுப்புரம் ரெயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டு இங்கிருந்தே இயக்கப்படும். அதேபோல் லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரெயிலும் விழுப்புரத்தோடு நிறுத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்