ராமேசுவரம்-அயோத்தியா விரைவு ரெயில்காரைக்குடி, ராமநாதபுரத்தில் நின்று செல்லும்

ராமேசுவரம்-அயோத்தியா செல்லும் ஷ்ரத்தா சேது அதிவேக விரைவு ரெயில் காரைக்குடியில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2023-09-12 18:45 GMT

காரைக்குடி

ராமேசுவரம்-அயோத்தியா செல்லும் ஷ்ரத்தா சேது அதிவேக விரைவு ரெயில் காரைக்குடியில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அறிவிப்பு

காரைக்குடி வழியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி பைசாபாத்-ராமேஸ்வரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். ஆனால் அந்த ரெயிலுக்கு காரைக்குடியில் நிறுத்தம் வழங்கப்படவில்லை.

இதனால் விஜயவாடா, நாக்பூர், பிரயாக்ராஜ், அயோத்தியா போன்ற பகுதிகளுக்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நிலையங்களில் ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மெண்ட் செல்லும் ஷ்ரத்தா சேது அதிவேக விரைவு ரெயில் காரைக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் நின்று செல்லும் என தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.

புதன்கிழமைகளில்

இதன்படி இந்த ரெயிலானது அயோத்தியாவில் இருந்து செப்டம்பர் 20-ந்தேதி முதல் புதன்கிழமைகளில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு ப்ராயக்ரஜ், நாக்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், தஞ்சாவூர் வழியாக காரைக்குடிக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.08 மணிக்கு வந்து சேர்ந்து, 11.10 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் நோக்கி செல்லும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயிலானது ராமேசுவரத்தில் இருந்து ஞாயிறுகிழமை இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு வரும் செப்டம்பர் 24-ந் தேதி முதல் திங்கள் தோறும் அதிகாலை 2.58 மணிக்கு வந்து சேர்ந்து 3.00 மணிக்கு புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், சென்னை எழும்பூர், விஜயவாடா, நாக்பூர், பிராயக்ரஜ் வழியாக அயோத்தியாவிற்கு புதன்கிழமை காலை 4.55 மணிக்கு சென்று சேரும்.

இதன்மூலம் காரைக்குடியில் இருந்து நேரடியாக புண்ணிய பூமியான அயோத்தியாவிற்கு நேரடியாக செல்ல முடியும், ராமர் கோவில் மற்றும் விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், பிராயக்ரஜ் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். இச்சேவைக்காக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு காரைக்குடி தொழில் வணிகக்கழகம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்