ராமானுஜர் சித்திரை திருவாதிரை உற்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் சித்திரை திருவாதிரை உற்சவம் நடைபெற்றது.;

Update: 2023-04-16 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் சித்திரை திருவாதிரை உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. 11 மணிக்கு பெருமாள், உபநாச்சிமார்கள் மற்றும் ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் தங்க சேஷ வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்டு கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்