ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் 2 பெண்கள் பலி - முதல்-அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம், மாயாகுளம் பகுதியில் நேற்று மதியம் அரசு பேருந்தும், தனியார் வாகனமும் எதிர்பாராத விதமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலைதடுமாறி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.