ராமநாதபுரம்: அல்சர் இருந்த 12-ம் வகுப்பு மாணவர் மது குடித்ததால் நேர்ந்த சோகம்...!
ராமநாதபுரத்தில் அல்சர் இருந்த 12-ம் வகுப்பு மாணவர் மது குடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், மது அருந்திய 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி அருகே உள்ள போத்த நதி கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவன், கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவருக்கு அல்சர் இருந்துள்ளது. இந்த நிலையில், நண்பர்களோடு சேர்ந்து மாணவன் மீண்டும் மது அருந்தி உள்ளார்.
அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வயிற்றுவலி அதிகமானதால், கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.