ராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் விளக்கக் கூட்டம்

பாவூர்சத்திரத்தில் தி.மு.க. சார்பில் ராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் விளக்கக் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-07 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகளின் உண்மை நிலை குறித்து விளக்க பொதுக்கூட்டம் பாவூர்சத்திரத்தில் பஸ்நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், மாநில பேச்சாளர் சரத்பாலா, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராம.உதயசூரியன் மற்றும் பலர் பேசினர்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஜேசுராஜன், முத்துபாண்டி, சேக்தாவூது, ஆறுமுகச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்விபோஸ், கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், துணை செயலாளர்கள் தமிழ்செல்வன், கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், ராஜேஸ்வரன், ரவிச்சந்திரன், சமுத்திரபாண்டி, சாமித்துரை, தொழிலதிபர் சேவியர்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ஜெயக்குமார், சிவன்பாண்டியன், மகேஷ்மாயவன், ரவிசங்கர், திவான்ஒலி, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்