அக்னி தீர்த்த கடற்கரைக்கு தங்க கருட வாகனத்தில் வந்த ராமபிரான்

ஆடித்திருக்கல்யாண திருவிழா தீர்த்தவாரி பூஜைக்காக அக்னி தீர்த்த கடற்கரைக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்தில் வந்தார்.

Update: 2023-07-17 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. இந்த நிலையில் 5-வது நாளான ஆடி அமாவாசையான நேற்று காலை 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் கோவிலில் இருந்து எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதை தொடர்ந்து பகல் 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளினார். இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவிழாவின் 6-வது நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 7-வது நாளான நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 21-ந் தேதி அன்று அம்பாள் தேரோட்டம், 23-ந்தேதி அன்று பகல் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் தபசு மண்டகப் படியில் வைத்து சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 29-ந்தேதி அன்று காலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்