கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்

Update: 2023-05-29 17:49 GMT


பூளவாடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை 8.45 மணிக்கு நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 28-ந் தேதி புனித தீர்த்தம் அழைத்து வருதல் நிகழ்ச்சியும் கடந்த 21-ந்தேதி காலை 6 மணிக்கு மங்கள இசை விக்னேஸ்வர பூஜை நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் மாலை 5 மணிக்கு மங்கள இசை வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு மங்கள இசை சாந்தி ஹோமம்நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மங்கல இசை யாகசாலை பிரவேசம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு மங்கள இசை 2-ம் கால யாக பூஜை தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் மாலை 5 மணிக்கு மங்கள இசை தீபாராதனை உபசார வழிபாடு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி காலை 5 மணிக்கு மங்கள இசை, மகா பூர்ணாகுதி தீபாராதனையும் காலை 8.30 மணிக்கு மூலஸ்தான விமான மகா கும்பாபிஷேகமும் 8.45 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் அன்னதானம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம் 6 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்