தர்மபுரி நகராட்சி சார்பில்திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு பிரசாரம் 27-வது வார்டுக்குட்பட்ட நாட்டான்மைபுரம், காந்திநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கி திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் முன்னிலை வகித்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என கலைக்குழுவினர் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் அவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதில் ஏராளமான பெண்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜன், சீனிவாசலு, சந்திரகுமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.