புதுச்சத்திரத்தில் பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-01-31 18:45 GMT

நாமக்கல்:

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வராணி முன்னிலை வகித்தார். புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலமானது, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 100 சதவீத எழுத்தறிவித்தல், உடல்நலம், மனநலம் பற்றி அறிதல், பணமில்லா பரிமாற்றம் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு மாணவ, மாணவிகள் நடந்து சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்