பரமக்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பரமக்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.;

Update: 2022-09-01 15:27 GMT

பரமக்குடி, 

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் பரமக்குடியில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி நேற்று மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று வைகை ஆற்றில் கரைக்கப ்பட்டது. கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து 42 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலமானது சந்தை கடை, சின்ன கடை வழியாக பெருமாள் கோவில் வகையாற்று படித்துறையை அடைந்தது. அங்கே அமைக்கப்பட்டு இருந்த பள்ளத்தில் விநாயகர் சிலைகள் போடப்பட்டு கரைக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது விநாயகர் சிலைகள் முன்பு ஏராளமான இளைஞர்கள் மேல தாளங்கள் முழங்க ஆடி வந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்