கடல்பசு விழிப்புணர்வு பேரணி

கடல்பசு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-05-29 15:41 GMT

தொண்டி, 

தொண்டியில் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் உலக கடல் பசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வன உயிரின காப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஸ் சுதாகர் பாகன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் காத்தவராயன் முன்னிலை வகித்தார். அனைவரையும் இந்திய வன உயிரின ஆராய்ச்சியாளர் ருக்மணிசேகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் தொண்டி மகாசக்தி புரம் கடற்கரை பகுதியில் மீனவர்களுக்கு கடல் பசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை திறக்கப்பட்டது. இதனை மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் சுதாகர் பாகன் திறந்து வைத்து மீனவர் களிடம் கடல் பசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் ஸ்ரேயாசா கள உதவியா ளர்கள் ஆண்ட் ரோஸ் பி மனோஜ்குமார் அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி சாரா பீட்டர் கள உதவியாளர் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்