ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
ஆம்பூர் நகர காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆம்பூர் நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் சரவணன் தலைமையில் மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ் முன்னிலையில் பைபாஸ் சாலையில் உள்ள ராஜிவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரமேஷ், துணைத் தலைவர் வர்தா அர்ஷத், மாவட்ட பொதுச் செயலாளர்கள் மின்னூர் சங்கர், சமியுல்லா, விஜயன், கோபி, ராஜசேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.