ராஜீவ்காந்தி நினைவு நாள்
ஆரணியில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.;
ஆரணி
ஆரணி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மார்க்கெட் ரோட்டில் உள்ள காந்தி சிலை முன்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கும், காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நகர தலைவர் ஜெ.பொன்னையன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது என்ற உறுதிமொழியையும், பயங்கரவாத உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.பி.ஜெ.ராஜாபாபு, மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன் மற்றும் உதயகுமார், நகரசபை உறுப்பினர் மருதேவி பொன்னையன், முன்னாள் நகரசபை உறுப்பினர் எஸ்.டி.செல்வம், ஆறுமுகம், குருமூர்த்தி, சம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.