ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை- அண்ணாமலை கண்டனம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் உள்ள கருத்துகளுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்!;

Update:2022-10-22 14:21 IST

சென்னை:

கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018-ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி, 2019 ஜனவரி 27 ஆம் தேதி மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகள் கழித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச்சில் செய்யப்பட்டது.

ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான "ரோஜ்கார் மேளா " திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆனையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

மேலும் இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

இது முக்கியமான நாள் .தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.

சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தாய்மொழியை வளர்க்க தி.மு.க. என்ன செய்துள்ளது.

துப்பாக்கி சூடு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் பாரத்தாக சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதில் என்ன தவறு இருக்கிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசயம் அவை. துப்பாக்கி சூடு நடத்தியது தவறா? நடத்திய விதம் தவறு.

எடப்பாடி சொன்ன ஒரு கருத்தை திரித்து சொல்வது சரி இல்லை.

ரஜினி சொன்ன கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். எனவே, பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் நாங்கள் சமூக விரோதி என்றோம் .

திருமாவளவன் , சீமான், கனிமொழி, மு.க.ஸ்டாலின் இவர்கள் எல்லாம் கருத்து சொல்லவில்லையா ? ஆனால் காவல் துறை அறிக்கை வந்தால் அது வேறு மாதிரிதான் இருக்கும்.

ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது. திரைப்படங்களில் பலர் கருத்து சொல்கிறார்கள் அதை கேட்க வேண்டிய தானே என்று அண்ணாமலை கூறினார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்