ஆரோக்கியத்துடனும் நிம்மதியுடனும் மக்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து...!

நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Update: 2023-02-28 10:02 GMT

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:-

எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்.

இவ்வாறு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்