ரஜினியின் உருவத்தில் விநாயகர் சிலை
திருப்பூர் மாவட்டம் உடுமலையையடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27)மண்பாண்டக்கலைஞரான இவர் மண்பாண்டங்கள் மட்டுமல்லாமல் தெய்வங்கள் மற்றும் கால்நடைகள் என அனைத்துவிதமான உருவ பொம்மைகளையும் செய்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர் தனது பெயரையே ரஜினிரஞ்சித் என மாற்றிக்கொண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் உருவ பொம்மையை செய்த இவர் அதனை ரஜினியிடம் நேரில் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் 1980 ஆண்டில் உள்ள ரஜினியின் தோற்றத்தில் சிலை செய்து ரஜினியிடம் வாய்ஸ் மெசேஜ் மூலம் பாராட்டு பெற்றுள்ளார். இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் விநாயகர், லால்சலாம் படத்தில் வரும் மொய்தீன் பாய் விநாயகர் சிலை செய்து அசத்தியுள்ளார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது.