உதயகருட சேவையில் ராஜகோபாலசாமி வீதி உலா
உதயகருட சேவையில் ராஜகோபாலசாமி வீதி உலா
மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வசந்த உற்சவம் 10 நாட்கள் நடைபெற்றது. இக்கோவிலில் நேற்று உதய கருட சேவை நடந்தது. ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து ராஜகோபாலசாமி பரமபதநாதன் அலங்காரத்தில் கருட வாகனத்தில் புறப்பட்டு நேற்று காலை 7 மணிக்கு வீதி உலா வந்தார். அப்போது கோவில் யானை செங்கமலம் முன்னே வர கருட வாகனத்தில் வந்த ராஜகோபாலசாமி பாமணி ஆற்றங்கரையில் எழுந்தருளினார். அதேபோல் ரெட்டை குளம் அருகே உள்ள கோபிநாதசாமியும் கருட வாகனத்தில் கோவிலில் இருந்து வீதி உலாவாக வந்து கீழராஜவீதியின் தொடக்கத்தில் பாமணி ஆற்றங்கரையில் எழுந்தருளினார். அப்போது 2 கோவில்களின் சாமிகளுக்கும் ஒரேநேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.