குடிசை வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது பாதிக்கப்பட்டவர் பள்ளிக்கூடத்தில் தங்க வைப்பு
பலத்த மழையால் குடிசை வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது, பாதிக்கப்பட்டவர் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டார்.;
காவேரிப்பாக்கம்
பலத்த மழையால் குடிசை வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது, பாதிக்கப்பட்டவர் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஆலப்பாக்கம் ஊராட்சி, தச்சன்பட்டறை கிராம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஹரி என்பவரின் மகன் பரசுராமன் (வயது 27). இவர், குடிசை வீட்டில் வசித்து வருகிறார். விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குடிசை வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் நவீன், அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைத்தார்.
தொடர்ந்து அவருக்கு தேவையான போர்வை, உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.