கடலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

கடலூரில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-19 18:45 GMT


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது, பாரதி சாலை வழியாக சென்று வந்தது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், நகர்நல அலுவலர் எழில்மதனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அருளானந்தன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்