மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-10-16 18:00 GMT

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேலூர் மாவட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டை காந்திசிலை அருகே நேற்று நடந்தது. ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துணைமேயர் சுனில்குமார், உதவி கலெக்டர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி ஊர்வலம் மற்றும் நகர, கிராமப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை ஒளிபரப்பும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு திரை வீடியோ வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் கோட்டை காந்தி சிலையில் இருந்து தொடங்கி மக்கான் சிக்னல், அண்ணாசாலை, தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று வெங்கடேஸ்வரா பள்ளியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நித்தியானந்தம், உதவி நிர்வாக பொறியாளர் குமரவேல், உதவிபொறியாளர் ஜெயப்பிரபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்