'சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நிறைவு பெறும்' - அமைச்சர் கே.என்.நேரு

மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட உள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.;

Update: 2023-08-30 22:04 GMT

சென்னை,

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திட்டமிட்டபடி செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு புழல் ஏரி, பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் கொண்டு வரப்படுவதால் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்றார்.

வெயில் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் சென்னையில் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளும் வரும் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நிறைவு பெறும் என்றும், இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்