சங்கராபுரத்தில் மழை

சங்கராபுரத்தில் நேற்று மழை பெய்தது.

Update: 2023-09-14 18:45 GMT


சங்கராபுரம், 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இந்த மழை நீடித்து வருகிறது. குறிப்பாக சங்காபுரம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பொழிவு இருந்து வருகிறது. அந்த வகையில், நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு வந்து, 5 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது. இதனால் தாழ்வான இடகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சங்காரபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்