நாமக்கல்லில் அதிகபட்சமாக 69 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல் கலெக்டர் அலுவலக சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 69 மி.மீட்டர் மழைபதிவானது.

Update: 2023-09-26 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல் கலெக்டர் அலுவலக சுற்றுவட்டார பகுதிகளில் 69 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

கலெக்டர் அலுவலகம்-69, நாமக்கல் நகரம்-36, திருச்செங்கோடு -27, பரமத்திவேலூர்-26, கொல்லிமலை-21, மோகனூர்-19, ராசிபுரம்-14, மங்களபுரம்-13, எருமப்பட்டி-12, சேந்தமங்கலம்-5, குமாரபாளையம்-4, புதுச்சத்திரம்-3. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 249 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்