திருத்தணியில் கோவில் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீர்; விரைந்து அகற்ற கோரிக்கை

திருத்தணியில் கோவில் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-12-11 11:46 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் பணிபுரியும் வெளியூரைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றுவதற்கு ஏதுவாக முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அரக்கோணம் சாலையில் கோவில் துணை ஆணையர் அலுவலகம் பின்புறம் பணியாளர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் குறைந்த வாடகையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 'மாண்டஸ்' புயலால் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக அரக்கோணம் சாலையில் உள்ள முருகன் கோவில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு வெளிவர முடியாத சூழல் உள்ளது. மேலும் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்